யாழில் வெங்காய இலை சுரங்க மறுப்பி தாக்கம் (Photos)
யாழ். மாவட்டத்தின் சுன்னாகம், தெல்லிப்பளை, மாதகல், சங்கானை, அச்சுவேலி, கோப்பாய் மற்றும் வடமராட்சி பிரதேசங்களில் வெங்காயச் செய்கையில் இலை சுரங்க மறுப்பி தாக்கமானது அதிகளவில் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சிறிரங்கன் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் (பயிர்பாதுகாப்பு) நா.நிரஞ்சன்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஆக்கிரமிப்பு பீடையான இலை சுரங்க மறுப்பி கடந்த காலங்களில் வெங்காயத்தில் சிறியளவிலான தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும் தற்பொழுது கூடியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பீடையின் விஞ்ஞானப் பெயர் பைற்ரோமைசா ஜிம்னோஸ்ரொமா (Phytomyza gymnostoma) ஆகும் இது டிப்ரறா (Deptara) வர்ணத்ததைச் சார்ந்த ஈ வகை பூச்சி எனவும் தெரிவிக்கப்படுகிறது.




WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
