வாகனம் கொள்வனவு செய்ய முடியாமைக்கு யார் காரணம்..! அரசாங்கம் விளக்கம்
நாட்டு மக்கள் அனைவரினாலும் வாகனங்கள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமைக்கு யார் காரணம் காரணம் என்பது குறித்து ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி விளக்கியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நாட்டு மக்களினால் வாகனங்களை கொள்வனவு செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதயை எதிர்க்கட்சி நாட்டை சரியான முறையில் ஆட்சி செய்திருந்தால் மக்கள் அனைவரினாலும் வாகனங்கள் கொள்வனவு செய்யக்கூடிய இயலுமை ஏற்பட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களுக்கான வரி
நாடாளுமன்றில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விட்ஸ் ரக மோட்டார் வாகனம் ஒன்றை 12 லட்சத்திற்கு வழங்க முடியும் என ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் வெகன்ஆர் ரக வாகனமொன்றை 96 லட்சம் ரூபாவிற்கும் ஆல்டோ ரக வாகனமொன்றை 72 லட்சம் ரூபாவிற்கும் உயர்த்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் குற்றம் சுமத்தியிருந்தார்.
அரசாங்கம் வாகனங்களுக்கான வரிகளை 600 வீதமாக உயர்த்தியுள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




