இராணுவ சீருடையில் ஹெரோயினை கடத்திய நபர்கள்
களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை பிரதேசத்தில் வான் ஒன்றை சோதனையிட்ட போது, அதில் இருந்து 45 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை மத்திய மோசடி தடுப்பு பிரிவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வானை ஓட்டிச் சென்ற சாரதி இராணுவ சீருடை அணிந்து காணப்பட்டதாகவும், மற்றைய நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வானின் சாரதி இராணுவத்தில் கடமையாற்றும் நபர் எனவும் அவருக்கு எதிராக இராணுவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஹொரணை பிரதேசத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அண்மைய காலத்தில் கைப்பற்றப்பட்ட நான்காவது போதைப்பொருள் தொகை இதுவாகும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam