முள்ளிவாய்கால் நினைவேந்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு - கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில், 10 பேர் அன்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்குத் தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தி அதனைப் படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த நிலையில் அவர்களைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கல்குடா பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற அனுமதியினை பெற்று 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து இன்று (13) குறித்த வழக்கு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் 10 பேரின் சார்பில் சிரேஷட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் கனகரத்தினம் சுகாஸ் ஆகியோர் ஆஜராகினர்.
இந்நிலையில் கோவிட் தொற்று காரணங்களால் நீதிமன்றத்துக்கு அழைத்துவர முடியாத நிலையில் அவர்களைத் தொடர்ந்தும் 27 திகதிவரை 14 நாட்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri