யாழில் திருட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது
இளவாலை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று(17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முக மூடி கொள்ளையன் உட்புகுந்து, வீட்டின் கதவை திறந்து விட மேலும் நான்கு முகமூடி கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து வீட்டாரை கத்தி முனையில் மிரட்டி அவர்களிடம் இருந்து 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பொலிஸ் முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீட்டார் கொடுத்த முக மூடி கொள்ளையர்களின் அங்க அடையாளங்கள் குறித்த தகவலின் அடிப்படையில் 20 , 21 வயதான இருவரை கைது செய்துள்ளனர்.
தொடரும் விசாரணைகள்
கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், மேலதிக விசாரணைகளை அவர்களிடம் முன்னெடுத்து வருவதாகவும் இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
யாழில் பெருந்தொகையான நகை திருட்டு |



