கொழும்பில் எரிந்த நிலையில் காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு - கொஹூவல ஆசிரி மதவத்தையில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்த காரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவரின் சடலம் குறித்து பொலிஸார் சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
33 வயதான நாசர் முகமது ஹஃபன் என்ற வர்தகர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
களுபோவில - பாதிய மாவத்தை பகுதியை சேர்ந்த 33 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான இவர், திருமணத்தின் பின் கொஹுவல பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்துள்ளார்.
தீ விபத்தின் போது வெடிப்பு சத்தம் கேட்டதாக சம்பவ இடம்பெற்ற பகுதியிலுள்ள அயலவர்கள் தெரிவித்தனர்.
ஒரு நபர் ஒரு மரம் விழுந்ததைப் போல ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும், வீட்டிற்கு வெளியே யாரும் இல்லாததால் அவதானித்து பார்த்த போது கார் தீப்பிடித்து எரிவதை தெரிவித்துள்ளனர்.
குறித்த கார் குறுகிய சாலையில் தீப்பிடித்ததால் யாரும் தீ விபத்துக்குள்ளான இடத்திற்கு செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் கொல்லப்பட்டவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
