உயிரிழந்த, புலிகளின் உறுப்பினர்களின் பெயரில் வெளிநாடுகளுக்கு நபர்களை அனுப்பிய நபர் கைது
உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு சொந்தமான அடையாள அட்டைகள் மற்றும் பிறப்பத்தாட்சி பத்திரங்களை பயன்படுத்தி பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இவ்வாறு பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து, இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
40 வயதான இந்த நபர் நீண்டகாலமாக இவ்வாறு போலியான ஆவணங்களை தயாரித்து தமிழ் இளைஞர், யுவதிகளை ஐரோப்பா உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கூறியுள்ளனர்.