யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி: சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த குற்றச்சாட்டிலேயே எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பணத்தினை கொடுத்துள்ளார்.
விளக்கமறியல்
இந்நிலையில் அந்த பணத்தினை வாங்கிய நபர் அவரை வெளிநாட்டுக்கும் அனுப்பாமல், அந்த பணத்தினை திருப்பியும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார்.
அந்தவகையில் மேற்படி குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.உதயானந்தன் தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இந்நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
