நாட்டின் பல பகுதிகளில் பதிவான விபத்து: மூவர் பலி
நாட்டின் சில பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விபத்துக்கள் நேற்றைய தினம் (05.04.2025) இடம்பெற்றுள்ளன.
மஹாபாகே விபத்து
மஹாபாகே பொலிஸ் பிரிவின் வெலிசர பகுதியில், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மூன்று சிறுவர்களில் ஒருவர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிசர, றாகம பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், ஏனைய இரண்டு சிறுவர்களும் பலத்த காயமடைந்து றாகம வைத்தியசாலையில் உள்நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சாரதியை கைது செய்வதற்காக மஹாபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதியதலாவ வீதி விபத்து
இதேவேளை, கண்டி - பதியதலாவ வீதியில் பலகொல்ல செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அருகில் வீதியைக் கடக்க முற்பட்ட பெண் பாதசாரி மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் அந்த பெண் பலத்த காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தம்புள்ளை - குருநாகல் வீதியில் கொஸ்கெலே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 76 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.. விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சரத்குமார் Cineulagam
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா... எரிவாயு ஏற்றுமதியை இந்த நாடுகளுக்கு இருமடங்காக அதிகரித்த ரஷ்யா News Lankasri