வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் - தப்பியோடிய பயணிகளால் குழப்ப நிலை
கொழும்பு, வெள்ளவத்தை காலி வீதியில் நபர் ஒருவரின் செயற்பாடு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
காலி நோக்கி பயணித்த பேருந்து சாரதிக்கு சவால் விடும் மோட்டார் வாகன சாரதி ஒருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்க்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வெள்ளவத்தை, W.D சில்வா மாவத்தைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வாகனத்தின் சாரதி ஹொக்கி ஸ்டிக் ஒன்றுடன் தனது வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார்.
பேருந்து சாரதி உரிய முறையில் வாகனம் ஓட்டவில்லை எனவும், தனது சமிக்ஞைகளை கவனிக்காமல் பேருந்து ஓட்டியமையினாலும் மோட்டார் வாகன சாரதி கோபமடைந்துள்ளார்.
அத்துடன் பேருந்து சாரதிக்கு நடு வீதியில் வைத்து அச்சுறுத்தும் வகையில் மோட்டார் வாகன சாரதி செயற்பட்டுள்ளார்.
பேருந்தினை கடுமையாக தாக்கியுள்ளதுடன் சாரதிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.






சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

நிலாவின் அப்பா சோழனிடம் போட்ட சவால், குடும்பம் உடைந்துவிடுமா.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
