வீட்டுக்குள் புகுந்து சாவியை எடுத்து வாகனத்தை களவாடிய திருடன்
நிட்டம்புவை பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான பெஜிரோ வண்டியை திருடிச் சென்றுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவை நகரில் வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரது வாகனமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ள திருடன், சாவிகள் மாட்டி வைக்கும் இடத்தில் இருந்து வண்டி சாலியை எடுத்து, பெஜிரோவை கொள்ளையிட்டு சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொள்ளை நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கியுள்ளனர். பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி சந்தேக நபர் கொழும்பு - கண்டி பிரதான வீதி ஊடாக கொழும்பு திசை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam