லண்டனில் இருந்து வருகை தந்த இலங்கையர் கிளிநொச்சியில் கைது
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (30) கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், லண்டனில் இருந்து வந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரி தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்கவிற்கு பொலிஸ் நிலைய அலுவலகத்திற்குள் வைத்து 50000 பணத்தினை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளார்.
இதன்போதே குறித்த சந்தேக நபர் நிலைய பொறுப்பாதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (30) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
