விசேட அதிரடிப்படையினரால் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தலைவரின் நெருங்கிய உறவினர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் கரந்தெனிய சுத்தாவின் நெருங்கிய உறவினர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காலி, பிடிகல, வடுவெலிவிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது இடம்பெற்றுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி பிடிகல, ஹொரங்கொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை ஒன்று சேர்த்தமை மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள்
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பிடிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் கூறியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam