இவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அழையுங்கள்! லண்டன் பொலிஸார் அவசர கோரிக்கை
வடக்கு லண்டனில் பெண் ஒருவரிடம் மோசமாக நடந்துகொண்டதாக கூறப்படும் நபர் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு லண்டனில் பேருந்தில் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறப்படும் நபர் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அலெக்ஸாண்ட்ரா பார்க் சாலையில் ரூட் 102 பேருந்தின் மேல் தளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் 30 வயதான பெண் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
செப்டம்பர் 13ம் திகதி மாலை 6 மணியளவில் நடந்த சம்பவத்தின் போது குறித்த நபர் தன்னை பேருந்தில் இருந்து வெளியேறுவதைத் தடுத்ததாகவும், தன்னைத் தகாத முறையில் தொட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
இந்நிலையில், “சிசிடிவி காணொளியில் இருக்கும் நபரின் பெயரை அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாக பெருநகர காவல்துறையின் சாலைகள் மற்றும் போக்குவரத்து காவல் துறையின் பொலிஸ் கான்ஸ்டபிள் நிக் கோர்ட்ரைட் (Nick Kortrigh) தெரிவித்துள்ளார்.
"குறித்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைத்தால், உடன் தொடர்பு கொள்ளுமாறு” அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
படத்தில் உள்ள நபரின் பெயரைக் குறிப்பிடக்கூடிய எவரும் 101 ஐ அழைக்றுமாறும் அல்லது 7921/13SEP ஐ மேற்கோள் காட்டி @MetCC ஐ ட்வீட் செய்யுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri