அங்கஜன் இராமநாதனின் அலுவலக பதாகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது (Photos)
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலக பதாகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலகத்தின் முன் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை நேற்று முன்தினம் இரவு தீவைக்கப்பட்டது.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலக, சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவரை இன்று கைது செய்துள்ளார்.
சந்தேகநபர் வேலைவாய்ப்புப் பெற்றுத்தரவில்லை என்ற விரக்தியில் அலுவலகப் பதாகைக்கு தீவைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இந்த செயல் அமைந்துள்ளமையினால் சந்தேகநபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri