தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் : உறங்கிக் கொண்டிருந்தவர் படுகொலை
காலியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரரும் படுகாயமடைந்துள்ளதாக காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
அக்மீமன, குருந்தகந்த, தோட்டகொட பகுதியைச் சேர்ந்த ஹிக்கடுவ கோரலகேயைச் சேர்ந்த பிரசன்ன குமார என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கழுத்து அறுத்து கொலை
உயிரிழந்தவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வாளால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கொலையின் பின்னர் உயிரிழந்தவரின் மூத்த சகோதரனையும் கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
