சட்ட விரோதமாக மருந்து பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
கல்முனையில் கடற்படை மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்காக மருந்துகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
63 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து 5,033 மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக சட்ட நடவடிக்கைகள்
இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்த போதே மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மருதமுனையை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட மருந்துப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை உணவு மற்றும் மருந்துப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
