நெடுந்தீவு கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (10.12.2025 )காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சி
இது தொடர்பில் தெரியவருகையில் - நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏறுவதற்கு பரராசசிங்கம் பிறேமகுமார் என்பவர் முயற்சித்துள்ளார்.

இதன்போது அவர் படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்துள்ளார்.
அவரை மீட்க அருகில் நின்றவர்கள் முயற்சியை மேற்கொண்டபோதும் அவரை உயிருடன் மீட்க முடியாது போயுள்ளது.
உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15 ஆம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam