பொம்மை காரில் மணிக்கு 148 கிமீ வேக பயணம்: மாணவனின் உலக சாதனை
பொம்மை காரில் மணிக்கு 148 கிமீ வேகத்தில் சென்று மார்செல் பால் என்ற பொறியியல் மாணவர் உலக சாதனையை படைத்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர் மார்செல் பால் ஒரு சிறிய எலெக்ட்ரிக் பொம்மை காரை மாற்றியமைத்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
பொம்மை காரில் சில மாற்றங்களைச் செய்து அதில் மணித்தியாலத்திற்கு 148.454 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
வியக்கத்தக்க சாதனை
மார்சல் போலின் (Marcel Paul) இந்த வியக்கத்தக்க சாதனையை Guinness World Records தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில், தனது மேம்படுத்தப்பட்ட மினியேச்சர் காரில், பின்பக்கமாக சாய்ந்து படுத்தவாறு, Hockenheimring பந்தயப் பாதையில் மார்சல் போல் மிக வேகமாக பயணிக்கும் காணொளி பகிரப்பட்டுள்ளது.
பகிரப்பட்ட ஒரே நாளில் 6.5 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 21,000 லைக்குகளையும் இந்த காணொளி பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |