பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கைதுப்பாகியுடன் கைது
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைதுப்பாக்கியுடன் ஒருவரை இன்று(19.02.2023) கைது செய்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைனுக்கு செல்வதற்கு கைதுப்பாக்கியுடன் கம்பளையைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளையைச் சோந்த குறித்த நபர் சம்பதினமான இன்று பஹ்ரைனுக்கு பகல் 2.15 மணிக்குரிய விமானத்தில் செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
கைதுப்பாக்கி மீட்பு
அங்கு விமான நிலைய முதல் சோதனைச் சாவடியில் அவரின் பையை விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஸ்கானிங் செய்தபோது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைதுப்பாகி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டடு குறித்த நபரை கைது செய்ததுடன் கைதுப்பாக்கியை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
