பெருமளவான போலி நாணயத் தாள்கள் மற்றும் அச்சிடும் இயந்திரத்துடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போலி நாணயத்தாள் அச்சடித்த குற்றச்சாட்டில் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று (09.03.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள் அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயதுடைய குறித்த நபர் திருகோணமலையில் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரம்
குறித்த நபரிடம் போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரம் ஒன்றும் அச்சிடப்பட்ட 5000 ரூபா தாள்கள் 700 ம் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
