யாழில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு இரும்பு திருடியவர் கைது
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டுவிட்டு இரும்பு திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். காங்கேசன்துறை பகுதியில் நேற்றிரவு (07.10.2023) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை திருடிய இளைஞர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இக் கைது நடவடிக்கையை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
