அம்பாறையில் போதைபொருள் விநியோகம் செய்யும் நபர் கைது
அம்பாறையில் (Ampara) கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிகை அலங்கார நிலையம்
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நேற்று மதியம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இயங்கும் சிகை அலங்காரம் செய்யும் கடையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த கடையில் 220 மில்லி கிராம் கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளடங்கலாக தன்வசம் வைத்திருந்த சிகை அலங்காரம் செய்யும் 29 வயது சந்தேக நபர் கைதானார்.
மேலும், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
