பிரபல பாடசாலைக்கு மாணவியை சேர்த்துக் கொள்ள லஞ்சம் பெற்றவருக்கு நேர்ந்த கதி
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு மாணவியை முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்வதற்காக லஞ்சம் பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், திம்பிரிகஸ்யாய பகுதியில் வைத்து சந்தேக நபர் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்கள் பாடசாலை
கொழும்பில் உள்ள பெண்கள் பாடசாலையில் இந்தாண்டில் முதலாம் தரத்தில் சேர்க்க லஞ்சம் கோரியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று சந்தர்ப்பங்களில் ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, மீதமுள்ள இரண்டு லட்சம் ரூபாவை பெற முயன்ற போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.