அரசாங்க தரப்பிற்குள் தொடரும் ஊழல் செயற்பாடுகள்: பொன்சேகா குற்றச்சாட்டு
அரசாங்க தரப்பிற்குள் இன்னமும் ஊழல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(01) உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான அனுமதி விலை மனுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
மேலும், அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெயின் தரம் குறைவாக இருப்பதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, போராட்டக்காரர்களைக் கையாளும் சூழலில் ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸ் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.”என்று தெரிவித்துள்ளார்.