இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைக்கு எதிர்ப்பு
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் நேரில் சந்தித்து பேச வாய்ப்புதரக்கோரியும் குறித்த கடிதத்தில் வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (26.02.2023) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்
ஐனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காது விட்டால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டது.
நாடாளுமன்றில் பேசிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமையை பரிசீலிப்பதாக தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஊடக சந்திப்பில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புனித ஸ்தலமான கச்சதீவில்
கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இடம்பெறும் விடயத்துக்கு
பயன்படுத்த அனுமதிக்க கூடாது என யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஊடகங்கள் வாயிலாக
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
