மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறக்க அனுமதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை காலை தொடக்கம் இரவு 9 மணிவரை அனைத்து வர்த்தக நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் இன்று தெரிவித்துள்ளார்.
மாவட்ட கோவிட் தடுப்பு செயலணி கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் எவ்வாறு கோவிட் தொற்றை கட்டுப்படுத்தலாம் என விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையின் படி எந்தவிதமான ஆலய உற்சவங்கள் விழாக்கள் இடம்பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய ஆலய நிர்வாகிகள் தர்மகர்த்தாக்கள் ஆலய உற்சவங்களையோ, விழாக்களையோ தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன், இந்த நடைமுறை சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கை மறுபரிசீலனை செய்யும் வரை நடைமுறையில் இருக்கும்.
அதேவேளை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் சில மாநகரசபை, நகரசபை ஊடாக வர்த்தக நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கியது.
இதனால் வேறு நேரங்களில் மூடுவதால் சில குளறுபடிகள் இருந்தது. இதற்கிணங்க நாளை காலையில் தொடக்கம் இரவு 9 மணி வரை அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்க அனுமதிப்பதுடன், இரவு 9 மணிக்கு பின்னர் திறந்திருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
அதேவேளை வர்த்தக உரிமையாளர்கள் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் நேரம் குறித்து கண்டிப்பாக சுகாதார அறிவுறுத்தலை பேணி நுகர்வோரை அதிகமாக உள்வாங்காது. முககவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். கைகழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
இந்த செயற்பாடுகளில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கவனம் செலுத்தாதுவிட்டால் அவர்கள் மீது ,சுகாதார துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.
கடந்த 24 மணித்தியாலயத்தில் 119 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் இதுவரை 72 மரணங்கள் இடம்பெற்றுள்ளது.
எனவே இதனை பார்க்கின்ற போது கோவிட் அச்சுறுத்தலில் இருந்து இந்த மாவட்டம் முழுமையாக விடுபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.








போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
