அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி! அமைச்சு வெளியிட்ட தகவல்
அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உரிய கொள்கைகளை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னர் வாகன இறக்குமதி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி
அவர் மேலும் தெரிவிக்கையில், வாகன இறக்குமதி தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக அமைச்சரவையில் இது பற்றிய விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
சமீபத்தில் பொது போக்குவரத்து, சுற்றுலா போன்றவற்றிற்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக கூறினர்.
அதற்கு தேவையான கொள்கை இதுவரை வேலை செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
