369 பொருட்களை இறக்குமதி செய்ய நிதியமைச்சு அனுமதி
369 பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி அத்தியாவசியமில்லாத 369 பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய வரி உள்ளிட்ட சட்டங்களுக்கு அமைய இறக்குமதி செய்ய இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வற் வரி அதிகரிப்பு

தற்போது நடைமுறையிலுள்ள பொருந்தக்கூடிய வரிகள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமம் இல்லாமல் அவற்றை இறக்குமதி செய்யலாம்.
இன்றைய தினம் நிதியமைச்சினால் இந்த அனுமதி வழங்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 8 வீதமாக இருந்த வற் வரி இன்று முதல் 12 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri