கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடலங்களை கிழக்கில் அடக்கம் செய்ய அனுமதி
கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடலங்களை கிழக்கின் இரண்டு இடங்களில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரின் தகவல்படி, அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒட்டமாவடி மற்றும் இறக்காமம் பகுதியில் உள்ள சூடுபத்தினசேனை பகுதியை புதைகுழிகளாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக முன்மொழியப்பட்ட இரண்டு பகுதிகள் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட புதைகுழி எண்ணிக்கையை மூன்றாக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே மன்னார் வளைகுடாவில் உள்ள இரணைத்தீவை ஒரு புதைகுழியாக அங்கீகரித்ததாக அரசாங்கம் அறிவித்தது.
எனினும் இந்த அறிவிப்பைத் தொடர்ந்துஇ இரணைத்தீவின் பொதுமக்கள் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து ஒரு போராட்டத்தை ஆரம்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குடிநீரை மாசுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, கோவிட் வைரசால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கம் மறுத்து வந்தது.
எனினும் பல்வேறு அழுத்தங்களின் காரணமாக கேடிவிட் வைரசால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.





பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

நிலாவின் அப்பா சோழனிடம் போட்ட சவால், குடும்பம் உடைந்துவிடுமா.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
