நிரந்தரமாக முடக்கப்பட்ட ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
வன்முறைகளை தூண்டும் காரணத்தை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் ஆயுதம் தாங்கிய ஆதரவாளர்கள், கெப்பிட்டல் ஹில் பகுதியை முற்றுகையிட்டதை அடுத்து, 12 மணி நேரத்திற்கு ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
மீண்டும் வன்முறைகளை தூண்டினால், டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை பயன்படுத்தி வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நீண்டகால ஜனநாயகத்தை கொண்டுள்ள அமெரிக்காவின் ஜனநாயகத்தை ட்ரம்ப் குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் விமர்ச்சிக்கப்பட்டுள்ளது.