இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பாக நிரந்தர முடிவு எடுக்கப்படும்! கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு
அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பாக நிரந்தர முடிவு எடுக்க உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலைமை காரணமாக கடல் கடும் கொந்தளிப்பாக காணப்படுவதன் காரணமாகவும் கடற்படையினர் ஆழ் கடலுக்கு செல்ல முடியாததன் காரணமாகவும் இந்திய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
வடக்கில் வெள்ள நிவாரணம் வழங்க மறுத்த கிராம சேவகர்! முறைபாட்டிற்கு பின்னர் குடும்பங்களுக்கு நிவாரணம்..
நிரந்தர முடிவு
இந்திய துணைதூதர் சாய் முரளி அல்லது தமிழ்நாட்டு அமைச்சர் ஸ்டாலின் அல்லது மோடி ஆகியோர்தான் இதற்கு ஒரு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும்.

இந்திய கடற்றொழிலாளர்கள் கட்டுப்பாடு இன்றி தமது சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு உரிய தீர்வினை விரைவிலே எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மிக விரைவில் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு முடிவு கட்ட உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri