சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்திய மூன்று பேர் கைது (Photo)
சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களை கைது செய்துள்ளனர்.
அண்மையில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர்கள் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வாகனங்கள்
சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுண்ணாம்புக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிறுப்பிட்டி பகுதியில் வைத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள வாகன சாரதிகளை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
