பேரறிவாளனின் சிறைவிடுப்பு மேலுமொரு மாதம் நீடிப்பு
பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட சிறைவிடுப்பை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவான் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு வந்தார்.
இதனையடுத்து அவருக்கு 30 நாட்கள் சிறைவிடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பின்னர் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் சிறைவிடுப்பு வழங்கப்பட்டது. கடந்த மே 28ஆம் திகதி சென்னை புழல் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி முதல் பேரறிவாளனுக்கு சிகிச்சை நடைபெற்று வருகின்றது. சிகிச்சை தொடர்ச்சியாக அளித்தால் தான் நன்மை என மருத்துவர்கள் கூறுவதால் மேலும் ஒரு மாதம் சிறைவிடுப்பை நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட சிறைவிடுப்பை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.