பரோலில் விடுதலையானார் பேரறிவாளன்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பேரறிவாளன் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதான பேரறிவாளன், 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி பரோல் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நேற்று காலை பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தனி வான் ஒன்றில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பேரறிவாளன் 30 நாட்கள் பரோல் முடிந்ததும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 25 நிமிடங்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri