பேராதனைப் பல்கலை மாணவன் போதைப்பொருள்களுடன் கைது!
கண்டி - பேராதனைப் பகுதியில் போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 85 கிராம் 260 மில்லிகிராம் ஹஷிஷ் மற்றும் 11 கிராம் 210 மில்லிகிராம் குஷ் ரக போதைப்பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான மாணவன் ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
விசாரணை
கைது செய்யப்பட்ட மாணவன் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அந்த மாணவனை 5 நாள்களுக்குத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

சந்தேகநபரான மாணவன் இந்தப் போதைப்பொருள்களைப் பல்கலைக்கழக மாணவர்களிடையே விநியோகிக்கும் நோக்கில் வைத்திருந்தாரா அல்லது இதன் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் யார் என்பது தொடர்பில் பேராதனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri