பேராதனை பல்கலைக்கழகத்தின் சுகாதார பீட மாணவன் எடுத்த விபரீத முடிவு
பேராதனை பல்கலைக்கழகத்தின் சுகாதார பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவர் நேற்று (08.06.2023) தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நிலையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விடுதியின் இரண்டாவது மாடியில் உள்ள அறையொன்றில் குறித்த மாணவன் தற்கொலைக்கு முயற்சித்த போது கீழே விழுந்து காயமடைந்த நிலையில் மாணவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த 25 வயதுடைய மாணவரே இந்த விபரீத முடிவினை மேற்கொண்டுள்ளார்.
விசாரணையில் வெளியான தகவல்
குறித்த மாணவன் நேற்றிரவு ஏனைய மாணவர்களுடன் இரவு உணவு உண்பதற்காக வெளியில் செல்லாத நிலையில், நண்பர்கள் அவருக்கு உணவு கொண்டு வந்து அறை கதவினை தட்டி திறக்காத காரணத்தினால் அருகில் உள்ள ஜன்னல்கள் வழியாக அறைக்குள் நுழைந்து தேடியபோது, மாணவன் தரையில் காயமடைந்து கிடந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் புதிய மாணவர்களை இணையத்தில் ஆபாசமான காட்சிகளைக் காட்டி துன்புறுத்திய குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட நான்கு மாணவர்களில் இந்த மாணவரும் ஒருவர் எனவும் கூறப்படுகின்றது.
துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நான்கு மாணவர்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், விசாரணையை எதிர்கொள்ள மூன்று மாணவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளனர்.
இருப்பினும், குறித்த மாணவன் இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
