பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவர் மாயம்! பின்னணியில் சிக்கிய கடிதம்
பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த 25 வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையில் மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னணியில் சிக்கிய கடிதம்
குறித்த கடிதத்தில், தனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளமையினால் தான் அனைவரையும் விட்டு விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.


கடவத்தை, கணேமுல்ல பகுதியை சேர்ந்த மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவர் பேராதனை பல்கலையின் விடுதியிலிருந்து நேற்றிரவு வெளியேறிய நிலையில் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri