பேராதனை பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவன் உயிரிழப்பு
பேராதனை பல்கலைக்கழகத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் பம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு முன்பாக உள்ள நீர் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பெலிஹுல் ஓயா பம்பஹின்ன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய எச். எம். ஹசங்க விக்கும் விதாரண என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக ஐந்து நண்பர்களுடன் நீராடச்சென்ற போது, ஆழமான நீர்க்குழியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு அனுமதிச்சீட்டு பெறாமல் மணல் வளைவில காட்டுப்பாதையின் ஊடாக நீர்வீழ்ச்சி பகுதிக்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில்,உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அசங்க சுரவீர தலைமையில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |