மீள் உருவாக்கம் செய்யப்பட்ட கோட்டா கோ கம
காலிமுகத் திடல் கோட்டா கோ கம நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் தாக்கி அழிக்கப்பட்டது. கோட்டா கோ கமவில் இருந்த கூடாரங்கள், நூலகம் மற்றும் வேறு முக்கியமான பல இடங்களை ஆளும் கட்சியின் மிலோச்சத்தனமான ஆதரவாளர்கள் தாக்கி அழித்தனர்.

இதன் பின்னர் நாடு முழுவதும் கடும் பதற்றமான நிலைமை ஏற்பட்டதுடன் இந்த அநாகரீகமான தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக மக்கள் இணைந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு பல்வேறு வகையான தண்டனைகளை வழங்கியதை காணக் கூடியதாக இருந்தது.
இந்த நிலையில், ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், கோட்டா கோ கம போராட்டகாரர்கள் இன்று ஒன்றுக் கூடியுள்ளதுடன் அந்த இடத்திற்கு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் வந்திருப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.
இதன் பின்னர் அனைவரும் இணைந்து அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டவற்றை மீண்டும் நிர்மாணித்துள்ளனர்.

புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 18 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri