மக்கள் வங்கி, சீன நிறுவனத்துக்கு 8 மில்லியன் டொலா்களை செலுத்த கட்டுப்பட்டுள்ளது
கடன் கடிதம் (LC) திறக்கும் போது வங்கிகள் ஒப்புக்கொண்ட விதிமுறைகளின்படி சீன நிறுவனமான, Qingdao Seawin Biotech Group Co. Ltdக்கு இலங்கையின் மக்கள் வங்கி, 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் விஜித ஹேரத்(Vijitha Herath) தொிவித்துள்ளாா்.
நவம்பர் 2 ஆம் திகதி இலங்கை உர நிறுவனத்திற்கு மக்கள் வங்கி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் சீன நிறுவனத்திற்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை மக்கள் வங்கி செலுத்த வேண்டியுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்ட உடனேயே, சுங்க மற்றும் ஆவணக் கடன்களுக்கான நடைமுறையின்படி, அந்தத் தொகையை செலுத்துவதற்கு வங்கி கட்டுப்பட்டிருப்பதாக, மக்கள் வங்கி, இலங்கை உரக் கம்பனி லிமிடெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக விஜித ஹேரத் கூறினார்.
அரசாங்கத்தின் அறியாமை முடிவுகள் காரணமாகவே அப்பாவி விவசாயிகளின் நிதியை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்தாா்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam