நீதிமன்ற தீர்ப்பால் கவலையில் மக்கள் - எம்.கே.சிவாஜிலிங்கம் (Video)
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது என எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Sivajilingam) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று நகர்த்தல் பிரேரணையின் வழக்கு முடிவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்திருக்கின்றது.
3 மணிநேரம் எமது சட்டத்தரணிகள் தொடர்ந்து எங்களுடைய சமர்ப்பணங்களை சமர்ப்பித்தும், பொலிஸார் தரப்பின் சமர வாதாடி பல
நீதி சமர்ப்பணங்களிற்கு எதிர் தரப்பு சமர்ப்பணங்களை சமர்ப்பித்து வாதாடி, பல நீதிமன்றங்கள் குறித்த விடயங்கள் சொல்லப்பட்டும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
