வீடுகளில் குண்டுகளை வைத்துள்ள மக்கள் - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
அரசாங்கம் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்ந்தும் விளையாடி வருவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ள பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எரிவாயு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் பல தடவைகள் கேள்வி எழுப்பிய போதிலும் அரசாங்கம் இந்த விடயங்களை உதாசீனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை மாற்றிக் கொடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிவாயு பிரச்சினையுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றது எனவும், மக்கள் வீடுகளில் குண்டுகளை வைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri