“முடிவுகளை மாற்ற வேண்டும்! அல்லது ஆயர் இல்லங்களை முற்றுகையிடுவோம்”(Video)
மாவீரர்களை நினைவுகூரும் நாளை அரசியலுக்காகவோ, ஏனைய தேவைகளுக்காகவோ, தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்த விடயங்களுக்காகவோ யாரும் பயன்படுத்துவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் (Kadir) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்.
மாவீரர் நாளினை ஏனைய தேவைகளுக்காக யாரும் பயன்படுத்துவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
தமிழ்மக்களின் தமிழ்தேசிய விடுதலைக்காக இந்த மண்ணில் இலங்கை அரசாங்கத்துடன் போராடி வீரமரணம் அடைந்த மாவீரர்களை நினைவு கொள்வதற்காக தமிழீழ தேசியத்தலைவரால் நியமிக்கப்பட்ட நாளிலே அந்த மாவீரர் நாள் மண்ணில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மாவீரர் நாள் என்பது ஒரு துக்க நாள் அல்ல மாவீரர் நாள் ஒரு எழுச்சி நாளாகத்தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
தமிழீழ வீடுதலைப்போராட்டத்தில் முதல் மரணித்த மாவீரன் சங்கர், மரணித்த நேரத்தில் நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தேசியத்தலைவரால் தமிழ் மக்களின் நலன் விரும்பிகள்,புத்தி ஜீவிகள் ஒன்றிணைந்து உலகத்தமிழர்களின் அங்கிகாரத்துடன் நியமிக்கப்பட்ட மாவீரர் நாள் தமிழர்களின் தேசிய எழுச்சி நாளாக ஆண்டாண்டு காலம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
தமிழினம் உலகத்தில் வாழும் வரை இந்த நாளில் எழுச்சி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும்.
இந்த நாள் தொடர்பில் பல சர்சைக்குரிய கருத்துக்கள் வந்துள்ளது. ஒன்றிணைந்த ஆயர் இல்லங்கள் இந்த நாள் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பது கலந்துரையாடி இருப்பதாக அறிகின்றோம்.
உண்மையில் மாவீரர் நாள் தொடர்பாகவோ எமது விடுதலைப்போராட்டங்கள் தொடர்பாகவோ சம்மந்தப்படாத தரப்புக்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவது அனுமதிக்க முடியாது.
என்னுடன் பல மாவீரர் குடும்பங்கள் இந்த விடையம் தொடர்பில் அழைப்பினை ஏற்படுத்தி பல வேதனைகளை தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலமை தொடருமாக இருந்தால் மாவீரர்களின் பெற்றோர்கள் பெரும் அணிகளாக திரண்டு ஆயர் இல்லங்களுக்கு எதிராக பலமான எதிர்ப்புக்களை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள் அவர்களின் கருத்தினை மதிக்கின்றோம்.
தயவு செய்து மதம் சார்ந்த விடையங்களுக்காக வீரர்களின் நினைவு நாளில் மாற்றம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் வெளியிட்ட அறிக்கைகளை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் நீங்கள் சிறந்த புத்திஜீவிகள் பல விடயங்களை கற்றறிந்தவர்கள் தேவையற்ற விடையத்தில் தலையிடுவது இனத்திற்கு துரோகம் செய்யும் நிலைப்பாடாக எமது மக்களால் கருதப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
மாவீரர்களின் துயிலும் இல்லங்களுக்குள் நாங்கள் செல்கின்றபோது எங்கே எங்கள் தமிழீழம் என்றுதான் கேட்பார்கள்.
மாவீரர்கள் அதனை நாங்கள் அடைய முடியத ஒரு நிலையில் திறந்த சிறைச்சாலைக்குள் முடக்கப்பட்டு எங்கள் உரிமைக்காக குரல் கொடுக்கமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
தயவு செய்து ஏனைய செயற்பாட்டாளர்களாக இருந்தாலும் சரி மாவீரர் நாள் தொடர்பில் தேவையற்ற முடிவுகளை தீர்மானிக்க வேண்டாம்.
மாவீரர்களை நினைவுகூருவதை யாராலும் தடுக்கமுடியாது. அவர்கள் விதைக்கப்பட்ட துயிலும் இல்லங்களுக்குள் நாங்கள் நுளைவதற்கு இலங்கை அரசாங்கம் சட்டரீதியான தடைகளை போட்டுவைத்திருக்கின்றது.
அந்த தடைகளை உடைத்துக்கொண்டு நினைவு நாளை கடைப்பிடிக்க முடியுமானால் அது தொடர்பில் அனைவரும் ஒன்றாக முடிவெடுத்து செயற்படவேண்டும்.
இல்லையேல் எங்கள் மாவீரர்களுக்கான அஞ்சலியினை இதயசுத்தியுடன் நேர்மையாக எமது இல்லங்களில் அவர்களுக்கு விழக்கேற்றி அகவணக்கம் செலுத்துவது சிறந்தாக அமையும்.
மாவீரர்கள் எங்களை விட உயர்ந்தவர்கள் அவர்களின் உன்னதமான தியாகங்களை நினைவிற்கொள்வது இதயசுத்தியுடன் கடைப்பிடிக்க வேண்டிய எழுச்சிநாள்.
இந்த நாளினை அரசியலுக்காகவோ, ஏனைய தேவைகளுக்காகவோ, தனிப்பட்ட சொந்த நலன் சார்ந்த விடையங்களுக்காகவோ யாரும் பயன்படுத்துவதை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
நீங்களும் இதனை செய்வதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
