தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு பட்டாசு கொளுத்தி ஆதரவு தெரிவித்த மட்டக்களப்பு மக்கள்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் விக்ரமசிங்க வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அவரது வெற்றிக்கு உறுதுணை வழங்கும் வகையில் மட்டக்களப்பிலுள்ள ஜனாதிபதி தேர்தல் அலுவலகத்துக்கு முன்னால் வியாழக்கிழமை(15.08.2024) அவரது ஆதரவாளர்கள் தமது மகிழ்ச்சியை பட்டாசு கொழுத்தி வரவேற்கும் முகமாக ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது ஆதரவாளர்களால் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் தொங்டவிடப்பட்டு குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் எஸ்.சுரேஸ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
சஜித் பிரேமராசவுக்கு ஆதரவு
மேலும், வேட்புமனுத் தாக்கல் செய்த எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமராசவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(15.08.2024) மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
சஜித்பிரமதாசவுக்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு நகரின் அரசடியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் அலுவலகத்துக்கு முன்னால் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் என்.ரகுநாதனின் தலைமையில் பட்டாசு கொழுத்தி வரவேற்கும் ஆரவார இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது ஆதரவாளர்களாளால் சஜித் பிரேமராச அவர்களின் புகைப்படம் தாங்கிய பதாகைகள் தொங்கடவிடப்பட்டு, பட்டாசு கொழுத்தி வரவேற்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவர் சோ.கணேசமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரசார அமைப்பாளர்கள், மகளீர் அமைப்பாளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி - ருசாத்