வவுனியாவில் இணைய வகுப்புக்களை திட்டமிட்டு குழப்பும் விசமிகள்
வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் சூம் வகுப்புக்களை சிலர் திட்டமிட்டு குழப்பி வருவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், கோவிட் விடுமுறைக் காலத்திலும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் முகமாக சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் ஆசிரியர்களால் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியாவில் இடம்பெறும் சில சூம் வகுப்புக்களை, சிலர் குறித்த வகுப்பு இணைப்பை பெற்று அதற்குள் நுழைந்து அவற்றை குழப்பும் நோக்குடன் நாகரிகமற்ற வகையில் செல்லாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சில ஆசிரியர்கள் மன உளைச்சளுக்கு உள்ளாகியுள்ளதுடன், மாணவர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த செயற்பாட்டால் பாதிப்படைந்த ஆசிரியர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam