மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக்கட்டுபாட்டை மறந்து செயற்படும் மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக்கட்டுபாட்டை மறந்து மக்கள் செயற்படுவதைக் காணமுடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டும் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டு நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்து வருகின்றது.
ஆனால் சிலர் நாட்டின் சட்ட திட்டங்களையும், சுகாதார நடைமுறைகளையும் மீறிச்செயற்படுவதானது சமூகத்திற்கு ஆபத்தானதாக அமைகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், பயணக்கட்டுப்பாட்டை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், அதனை மீறும் வகையில் சிலர் செயற்படுவதைக் காணமுடிந்துள்ளது.
மட்டக்களப்பு நகர் போன்ற பகுதிகளில் பயணத்தடை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்பட்டாலும், புறநகர்ப் பகுதிகளில் பயணத்தடையினை மீறிய வகையில் சிலர் செயற்பட்டுவருவதைக் காணமுடிந்துள்ளது.
பொலிஸாரும், இராணுவத்தினரும் பயணத்தடைகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும் அதனையும் மீறும் வகையில் சிலர் செயற்பாடுகள் அமைந்துள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு
அச்சுறுத்தலாக அமையும் எனச் சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.



