வாடகை விமானங்களுக்கான இலட்சக்கணக்கான நிதியை செலுத்த தவறிய பிரமுகர்கள்?
இலங்கையில் வாடகை விமானங்கள் மூலம் தமது பயணங்களை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரபுக்கள் வாடகைக்கான பணத்தினை இதுவரை செலுத்தாமல் கடன் வைத்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் விமானப் படையினருக்கு ஒரு கோடியே 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதியை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிதியை செலுத்தாமல் தவறவிட்டுள்ள நிறுவனங்களில் அமைச்சுக்கள் உள்ளிட்ட 10 அரச நிறுவனங்களும்,இரண்டு தனியார் நிறுவனங்களும் உள்ளடங்குவதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, விமானப் படையினரிடமிருந்து 2003 -/ 2013 வருட காலப்பகுதியில் விமானங்களுக்கு 60 லட்சத்துக்கு அதிகமான நிதியும், 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 60 லட்சம் ரூபா நிதியும் செலுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
