சமையல் எரிவாயு வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்! வத்தளை பகுதியில் பதற்றம்
நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிவாயு கொள்வனவிற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் வத்தளை பகுதியில் எரிவாயு கொள்வனவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், எரிவாயு விற்பனை முகவர் நிலையத்தின் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிடே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. காலை முதல் மிக நீண்ட வரிசையில் எரிவாயு கொள்வனவிற்காக பொது மக்கள் காத்திருந்த நிலையில், குறிப்பிட்டளவாகவர்களுக்கே எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு எரிவாயு கிடைக்கவில்லை. இதனையடுத்து எரிவாயு விற்பனை முகவர் நிலையத்தின் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிடே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.