அரசின் மீது கடும் அதிருப்தி - அதிகாலை ஒரு மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
கொவிட் தொற்றிற்கு மத்தியில் ஒரு மாத காலமாக மூடப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவு கடந்த11 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பாரியளவிலான மக்கள் குவிந்திருந்ததனை அவதானிக்க முடிந்தததாக செய்தி வெளியாகியுள்ளது.
இவர்கள் நேற்று அதிகாலை ஒரு மணி முதல் வெளிவிவகார அமைச்சிற்கு அருகில் நிற்பதாக தெரியவந்துள்ளது. அங்கிருந்தவர்களில் அதிகமானோர் இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் அங்கு வருகைத்தந்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
பிறப்பு சான்றிதழ், கல்வி தகுதி சான்றிதழ்கள் போன்றவைகள் தூதரக சேவை பிரிவில் வழங்கப்படுகின்றது.
அங்கு வந்தவர்களில் பலர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் தற்போதே வெளிநாடுகளுக்கு செல்லவில்லை என்றால் எதிர்காலத்தில் செல்ல முடியாமல் போய்விடும் என்ற நோக்கத்திலேயே அங்கு பலர் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam